அருள்மிகு ஸ்ரீ பெரிய புனமங்கை என்கிற ஸ்ரீ பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தில் வைகைக் கரையில் அமர்ந்து தற்போது அருள்பாலித்து வருகிறார். மேற்காணும் அம்மனை 900 வருடங்களாக வணங்கி வந்துள்ளனர். கடந்த 50 முதல் 60 வருடங்கள் முறையாக வணங்கவில்லை. அம்மனின் உத்தரவின்படி தற்பொழுது கற்கோயில் திருப்பணி நல்ல முறையில் நடந்து வருகிறது.
ஸ்ரீ பெரிய புனமங்கை என்பவள் சுமார் 7 முதல் 12 வயது உடைய வாலை. இவளை எம் முன்னோர் முறையாக விரதம் இருந்து வணங்கியபோது, ஒரு தாயார் தன்னுடைய புடவை முந்தானையில் பொங்கல் அடுப்பின் தீ கங்கை பெற்ற அருள் கூறுவார். இந்த கங்கினால் அருள் கூறும் தாயாருக்கோ மற்றும் அவரது புடவைக்கோ கங்கின் சுவடோ பாதிப்போ இருந்ததில்லை என்று இதனை நேரில் கண்ட எங்கள் உறவினர் கூற கேட்டுள்ளோம். இம்மங்கைக்கு காவல் தெய்வங்களாக சந்தன கருப்பசாமியும் சோனைமுத்தையாவும் இன்றும் காவல் செய்கிறார்கள். மேலும் மதுரை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாமல் உச்சிஷ்ட கணபதி இங்கு அருள்பாலிக்கிறார்.
Arulmigu Sri Periyapunamangai Alias Sri Balathiripurasundari Amman temple is situated in the Vaigai river bank of Kodimangalam in Madurai District. Our ancestors were worshipping our Goddess from 11th century. She is 7 to 12 year old vaalai(small child) and she is guarded by Sri Santhana Karuppasami , Sri Sonai Muthiah and other Guardians.
For the past 60 years, we were not able to continue our worship. We were gifted to get back her blessings again from 2011 and thereafter twice a year we continued our pooja whole heartedly. We initially planned to construct temple using concrete, but our child goddess wished that the temple should be a privilege explaining our culture. As our Goddess blessing ,we are raising temple with Stones(Karkovil thirupani) from 2018.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது சான்றோர் வாக்கு.எங்கள் புனமங்கையே குழந்தையானவள்.
குழந்தைகள் அனைவருக்கும் விருப்பமானவர்கள் குழந்தைகளின் வெகுளிதன்மை,தூய்மை,உண்மை,கேள்வியகள் கண்டு வியக்காதவரும் இவ்வுலகில் உண்டோ? எங்கள் குலதெய்வமான பெரிய புனமங்கையின் குணாதிசயங்களை வார்த்தைகளால் வடிக்க இயலாது ஒருமுறை எங்கள் புனமங்கையை தரித்தவுடன் நீங்களே அளப்பரிய நிம்மதியை உணர்வீர்கள்.
அப்துல்கலாமின் கூற்றுப்படி
எங்கள் முன்னோர்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அரிய தகவலை பகிர்ந்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு,ஆடி 18 அன்று எங்கள் குடும்ப உறுப்பினர்கள் விரதமிருந்து வழிபாடு செய்வர்.பூஜை வேளையில் சாம்பிராணி மனமும் பூக்களின் நறுமணம் கடவுளின் ஸ்லோகங்களும் அந்த இடமே தெய்வீக தன்மையால் நிறைந்திருக்கும்.
எங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் தன்னுடைய புடவை முந்தானையில் அருள்வாக்கு கூறுவார் என்பதே நம் கேள்வி!
Child is equivalent to God(Kulanthiyum Theivamum Ondru)… Here Our goddess SriPeriyaPunamangai is itself a child.
We always love and like children. We admire children for their innocence, pureness, questioning capability and playfulness. Our cute child goddess PeriyaPunamangai qualities as a child cannot be explained in words. Once you visit our goddess you can feel the calmness in your mind.
As per Abdul Kalam words
தினமும் மூன்று முறை பூஜை வழக்கமான முறையில் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி, பிரதாஷம், அம்மவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றுக்கான சிறப்பு பூஜை நடக்கும்.
Daily three times Puja will be held on a regular basis. Every month special Puja for Sankadakara Chathurthi, Prathosham, Ammavasai and Poornima will happen.
இந்த புனிதமான நாளில் எங்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் எங்கள் அம்மனின் அலங்காரத்தை காண கோடி கோடி கண்கள் வேண்டும் விளக்கு பூஜைகள் பஜனைகள் ஆரவாரத்தோடு ஆரவாரமாக அரங்கேறும். பூஜையின் இறுதியில் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வழங்கப்படும் பூஜைக்கு பிறகு பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும்.
இந்த விசேஷ நாள் அன்று எங்கள் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் காலை வேளையில் எங்கள் தெய்வமான மங்கைக்கு வழிபாடு நடைபெறும் பின் மாலையில் விளக்கேற்றி பூஜை செய்து விநாயகர் வழிபாட்டுடன் எங்கள் பயணம் வைகை ஆற்றை நோக்கி நகரும் எங்கள் காவல் தெய்வங்களின் வழிகாட்டலுடன் வைகையாற்றின் குறிப்பிட்ட இடத்தை அடைவோம்.
இங்கு எங்கு முன்னோர்கள் இருண்ட வானில் நட்சத்திரமாக எங்களுக்கு அருள் புரிவர் பின் எங்கள் தெய்வங்களுக்கு படையல் செய்து கொட்டு மேளத்துடன் பூஜைகள் நடைபெறும் பின் சாமியின் அருள் பெற்றவர் அருள்வாக்கு கூறுவார் எங்களின் பல கேள்விகளுக்கும் விடை கிடைத்த கிடைக்கின்ற கிடைக்கப் போகின்ற இடமும் இதுவே எங்கள் முன்னோர்கள் நட்சத்திர வடிவமாக எங்கள் பூஜைகள் நிறைவேறும் வரை அருள் புரிவது விந்தையிலும் விந்தை.
New year special pooja for our goddess Arulmigu PeriyaPunamangai is held on Aadi 18. On this auspicious day specific Pooja will be done for Amman.On this day Amman is decorated wonderfully and we need crores and crores of eyes to get her darshan. Vilaku Pooja is held on this day with Bhajans and Sumangali women are provided with Thambulam. After the Pooja Annadhanam happens on a large scale.
The next special day we celebrate is Maha Shivaratri on Masi month. On this special day, morning pooja will be held for Arulmigu PeriyaPunamangai. In the evening Vilaku Pooja is held. Then Special Pooja is done for our Kaval Theivangal (Karuppa Samy and Sonai Muthiah) . We will start from our Temple, worship First God Ganesha and then arrive at Vaigai River bank to worship our god. What a pleasant moment it is! In the dark sky a bright star can be viewed. It is our ancestors. After praying the star, we provide padayal to our Kaval Theivangal. At this time the devotees' questions are answered by the God who comes in the person who is more towards the worship(Sami Aadupavar). Here we like to share an exciting moment. Yes, the star mentioned above will stay till our pooja completion. We have witnessed this for the past 8 years. We can't express that moment in words, it is a goosebumps moment.
ஸ்ரீ பெரிய புனமங்கை சந்தன கருப்பசாமி சோனைமுத்தையா கோயில் அறக்கட்டளை.
SHRI PERIYAPUNEMANGAI SANTHANA KARUPPASAMY SONAI MUTHIA TEMPLE TRUST.